Monday, 21 August 2017

அங்கன்வாடி ஊழியர் பணி நேர்முகத்தேர்வு



ஈரோடு:

 ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில், மாவட்டம் முழுவதும், 1,000 காலிப்பணியிடங்களுக்கு, அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் பணிக்கான நேர்முகத் தேர்வு, நாளை, 24ல் நடக்கிறது. இதன்படி, நாளை கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, கோபி, நம்பியூர், டி.என்.பாளையம், சத்தி, தாளவாடி, பவானி, அம்மாபேட்டை, அந்தியூர் ஆகிய யூனியனில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு, காலையில் நடக்கிறது. குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு, மதியம் நடக்க உள்ளது. தவிர, ஈரோடு ஊரக பகுதியை சேர்ந்த குறு அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு, 23ல், அங்கன்வாடி பணியாளர்களுக்கு, 24ல் தேர்வு நடக்க உள்ளது. தவிர, 24ல் மொடக்குறிச்சி, பவானிசாகர், ஈரோடு நகர்ப்புறத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலையிலும், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு, மதியமும் நடக்க உள்ளது. கூடுதல் சந்தேகங்களுக்கு, அந்தந்த யூனியன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தை அணுகலாம்.

Saturday, 5 August 2017

அரசு வேலைவாய்ப்பு


Image result for குரூப் 2 ஏ தேர்வு

பெருந்துறை: 

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு, விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெருந்துறை தாலுகா, துடுப்பதி, சிறுகளஞ்சி, சிங்காநல்லூர், பாலக்கரை, ஈங்கூர் ஆகிய ஐந்து கிராமங்களில், கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பட்டியல், மக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் அடிப்படையில், இவை நிரப்பப்படும். பெருந்துறை தாசில்தார் நேர்முகத் தேர்வு நடத்துவார். எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கு, 35 வயது, பி.சி., எம்.பி.சி.,க்கு, 32 வயது, இதர பிரிவுக்கு, 30 வயது இருக்க வேண்டும். கல்வித் தகுதி, ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க கூடாது. கல்வி சான்று, ஜாதி சான்று, குடும்ப அட்டை நகலுடன், பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில், வரும், 18ல் மாலை, 5:45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.