Friday, 23 June 2017

ஜீப் டிரைவர் காலிப்பணியிடம்

Image result for தமிழ்நாடு அரசு

ஈரோடு: 

ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அலகில் காலியாக உள்ள, நான்கு ஜீப் ஓட்டுனர் பணியிடங்கள், இனச்சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியான நபர்களிடம் இருந்து ஜூலை, 20ம் தேதிக்குள், 'மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சியரகம், ஈரோடு' என்ற முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இதில் ஒரு பணியிடம் பொது முன்னுரிமையற்றவர்களுக்கும், ஒரு பணியிடம் ஆதிதிராவிடர் - முன்னுரிமை பெற்றவர்களுக்கும், ஒரு பணியிடம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினருக்கும், ஒரு பணியிடம் பிற்படுத்தப்பட்டோருக்கும் ஒதுக்கப்படும். இப்பணிக்கு, 5,200 - 20,200 + 2,400 தர ஊதியம் என்ற விகிதத்தில் அமர்த்தப்படுவர். உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.


No comments:

Post a Comment