ஈரோடு:
மருத்துவ உதவியாளர், ஓட்டுனர் பணிக்கான நேர்முகத் தேர்வு, ஈரோடு அரசு மருத்துவமனை, டி.பி., ஹாலில் நாளை நடக்கிறது. ஓட்டுனருக்கு விண்ணப்பிப்பவர்கள், 10 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12 மணி நேர ஷிப்ட் முறையில் இரவு, பகல் பணியாற்ற வேண்டும். வயது வரம்பு, 23 வயதுக்கு மேலும், 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். உயரம், 162.5 செ.மீ., இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இவ்வுரிமம், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு முன் எடுத்திருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வித் தகுதி, ஓட்டுனர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும். மருத்துவ உதவியாளர் அறிவியல் பாடம் தொடர்பாக பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது, 20க்கு மேலும், 30க்கு மிகாமலும் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, 50 நாட்கள் வகுப்பறை பயிற்சி அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 044-28888060, 7397724813, 7338894971, 7094161122 ஆகிய தொலைபேசி எண்களில், காலை, 10:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என, ஈரோடு கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment